Kk Updates

6/recent/ticker-posts

Header Ads Widget

Thanks For Visiting My Webpage !!!! See All The Post !!!

1100 ஆண்டுகள் பழமையான தங்க நாணயங்கள் கண்டெடுப்பு.. மொத்த எடை 845 கிராம்!.. யாருடையது?

KK NEWS UPDATES

1100 ஆண்டுகள் பழமையான தங்க நாணயங்கள் கண்டெடுப்பு.. மொத்த எடை 845 கிராம்!.. யாருடையது?



ஜெருசலேம்: இஸ்ரேல் நாட்டில் 1100 ஆண்டுகளுக்கு முன்னர் மண்ணில் புதைக்கப்பட்ட தங்க நாணயங்கள் கொண்ட புதையலை இளைஞர் ஒருவர் கண்டெடுத்துள்ளார். இவை சுத்தமான 24 காரட் தங்கமாகும்


இஸ்ரேல் நாட்டில் தங்க நாணயங்கள் கொண்ட புதையல் கண்டுபிடிப்பு

இஸ்ரேல் நாட்டின் ரிஹோவோட் நகரில் உள்ள தொழிற்பூங்காவுக்கு அருகே தொல்லியல் துறையினர் ஆராய்ச்சி பல நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த ஆராய்ச்சியில் பல இளைஞர்கள் தன்னார்வலர்களாக தங்களை இணைத்துக் கொண்டனர்.

அந்த பகுதியில் புதைந்திருந்த படிமங்களை தோண்டி எடுத்து பரிசோதனை செய்து வந்தனர்


புதையல்

இந்த நிலையில் தன்னார்வலர்களில் ஒருவரான ஹொஹின் என்ற ஒரு இளைஞர் அப்பகுதியில் மண்ணை தோண்டி ஆய்வு செய்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு ஏதோ மெல்லிய இலைகள் போன்று காட்சியளித்தது. பின்னர் அவை தங்கநாணயங்கள் என தெரியவந்தது. அந்த இளைஞர் கண்டுபிடித்த புதையலில் மொத்தம் 425 நாணயங்கள் கிடைத்தன.


சுத்த தங்கம்

இவை அனைத்துமே 24 காரட் சுத்தமான தங்கமாகும். இந்த தங்கத்தின் எடை 845 கிராம் ஆகும். இந்த தங்கம் சுமார் 1100 ஆண்டுகள் பழமையானது என கூறுகிறார்கள். அதாவது 9ஆம் நூற்றாண்டை சேர்ந்த நாணயங்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது.


ஜோர்டான்

இஸ்ரேல், பாலஸ்தீனம், சிரியா, ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளை ஆட்சி செய்த அபாசித் ஹலிப்ஹேட் எனும் இஸ்லாமிய மன்னருடைய காலத்தை சேர்ந்த காசுகளாக இருக்கலாம் என தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து தொல்லியல் துறையினர் கூறுகையில், இந்த புதையலை 1,100 ஆண்டுகளுக்கு முன்னர் புதைத்திருந்த நபர் இதை திரும்ப எடுக்க எதிர்பார்த்திருந்திருப்பார்.


நகராத புதையல்

அதனால்தான் தங்கநாணயங்களை வைக்கப்பட்ட பாத்திரம் நகராதவாறு வைத்துள்ளார். இந்த புதையலை திரும்ப எடுப்பதிலிருந்து அவரை எது தடுத்தது என்பதை யூகிக்க மட்டுமே முடியும். இந்த புதையல் புதைக்கப்பட்ட போது இந்த பகுதியில் வொர்க்க்ஷாப்கள் இருந்தன. அதனால் இதை புதைத்தவர் யார் என்பதை கண்டறிவது முடியாத காரியம் என்றார். தங்க புதையல் கிடைத்ததை அடுத்து அந்த பகுதியில் தொல்லியல் துறை முகாமிட்டுள்ளனர்.


#tamilnews

#kk Rocking

Post a Comment

0 Comments

Thanks For Visiting My Webpage !!! Follow Me !!! See All The Posts !!!